Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 மே 16 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் மணப்பெண் அல்லது மணமகன் கிடைப்பது யாருக்கும் அவ்வளவு எளிதள்ள அதை நாம் அனைவரும் யாரவது சொல்லி கேள்விப்பட்ருப்போம் அல்லது தொலைபேசி பத்திரிகைளில் செய்திகள் பிரசுரிப்பதை பார்த்திருப்போம். இவ்வாறு உயிருடன் இருப்பவர்களுக்கே மணப்பெண், மணமகன் கிடைக்காமல் இருக்கையில் இறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் மூட நம்பிக்கையான சில விடயங்கள் நடந்தேரி வருகின்றன.
அந்தவகையில், கர்நாடகாவில் வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இறந்த பெண்ணை திருமணம் செய்ய இறந்த ஆண் வேண்டும் என்று செய்தித்தாளில் வெளிவந்த விளம்பரம் தான் அது 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அந்த பெண் குழந்தைக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்துள்ளனர் வீட்டார்.
நீண்ட நாட்கள் தேடியும் மாப்பிள்ளை கிடைக்காததால் அவர்கள் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை கொடுத்தனர். ‛‛இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை வேண்டும்’’ என அந்த விளம்பரத்தின் தலைப்பில் கூறப்பட்டு இருந்தது.
இதனை சிலர் வரவேற்ற நிலையில்இ இன்னொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மூடநம்பிக்கை என விமர்சனமும் செய்தது. இது ஒருபுறம் இருக்க அந்த விளம்பரத்தை பார்த்து 50 பேர் வரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் கர்நாடகாவின் துளுநாடு என அழைக்கப்படும் புத்தூர் பகுதியில்தான் நடந்துள்ளது. இங்கு இறந்த நபர்களுக்கு திருமணம் செய்து வைப்பது காலங்காலமாக நடக்கும் ஒரு நிகழ்வாக இருக்கிறது
குடும்ப உறுபினர் ஒருவர் இறந்தாலும் கூட அந்த நபர் தங்களின் குடும்பத்துடனே வசிப்பதாக நம்புகின்றனர். இதனால் தான் திருமணத்துக்கு முன்பே குடும்பத்தில் யாரேனும் இறந்தால் அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைப்பதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
24 minute ago
40 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
53 minute ago
1 hours ago