Editorial / 2023 ஜூலை 12 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய இரண்டு மார்பகங்களுக்குள் ஐந்து பாம்புகளை மறைத்துவைத்து கடத்துவதற்கு முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபுக்சியன் துறைமுகத்தில் இருந்து ஹொங்கொங்குக்கு செல்ல முயன்ற போதே ஷென்சென் சுங்க அதிகாரிகளால் அப்பெண் கைது செய்யப்பட்டார்.
ஃபுக்சியன் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் நுழையும் போது பெண்ணொருவர் வினோதமான உடல் வடிவத்துடன் இருப்பது சுங்க அதிகாரிகளின் கண்களுக்குத் தென்பட்டது.
அவரது அசாதாரண உடல் வடிவம் காரணமாக, சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை சோதனையிட்டபோது, அவரது மார்பில் 5 உயிருள்ள பாம்புகள் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
குறித்த பெண்ணின் அடையாளம் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஐந்து பாம்புகளையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026