Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2017 ஜனவரி 31 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமான பயணத்தில் பயணிகளுக்கு இணையாக பால்கன் பறவைகளும் பயணம் செய்ய சவுதிஅரேபியா இளவரசர் பயணச்சீட்டு எடுத்து விமானப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதுதொடர்பான செய்தி, டுபாயில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பால்கன் பறவைகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய பறவை. சவுதி அரேபிய இளவரசர், இந்த பால்கன் பறவைகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்டு, 80 பயணச்சீட்டுகளை வாங்கி, அப்பறவைகளை, இருக்கைகளுடன் கட்டிப் பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்திருந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பால்கன் பறவைகளுக்கு என்று பிரத்யேக பசுமை கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், பால்கன் பறவைகளை பாரெய்ன் குவைத், ஓமன், கட்டார் சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொனாக்கோ மற்றும் சிரியா நாடுகளின் வான்பரப்பில் பறக்க இது அனுமதி அளிக்கிறது எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago