2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த 3,500 ஜோடிகள்

Kogilavani   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக நாடுகளை சேர்ந்த 3,500 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட சம்பவம் தென்கொரியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இப் பிரமாண்ட நிகழ்வு தென்கொரியா, கெப்யொங்கிலுள்ள சியொங்ஸிம் உலக சமதான மையத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது, சர்சைக்குரிய தேவாலாயம் ஒன்றின் நிறுவுனரான மூனி என்றழைக்கப்படும் சன் மியங் மூன் என்பவரின் ஒருவருட நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரும் சர்ச்சைக்குரிய உலக அமைதி மற்றும் குடும்ப இணைப்பு அமைப்பு என்ற பெயரில் அழைக்கப்படும் தேவாலயம் ஒன்றை உருவாக்கிய மூனி அதில் ஒரே மேடையில் பிரமாண்டமான முறையில் திருமணங்களை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு 30,000 பேர் திருமண பந்தத்தில் ஒரே நாளில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மூனி உயிரிழந்துவிட அவரது ஞாபகார்த்தமாக 3,500 பேர் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் திருமண பந்தத்தில் இணையும் அதே தருவாயில் இதர நாடுகளை சேர்ந்த மேலும் 24,000 பேர் திருமணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X