2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

பூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த நபர்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூச்சிகளை தின்று 12 நாட்கள் உயிர்வாழ்ந்த முதயவர் ஒருவர் நபர் பிரேசிலின் காட்டு பகுதியில் இருந்து மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பிரேசிலைச் சேர்ந்த கிலெனோ வியெய்ரா தா ரோச்சா (65) என்ற பொறியியலாளராரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

இவர் விலா த சுகுந்துரி எனும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வசிக்கும் மக்களுக்கும் இவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ட்ரான்ஸ் அமேசோனியான் ஹைவேயில் உள்ள ஓட்டலில் இருந்து அவர் வெளியே நடக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் அவர் வழி தவறி காட்டுக்குள் நுழைந்துவிட்டார். மானூஸ் நகரத்தில் இருந்து 435 கி.மீ. தொலைவில் உள்ள அந்தக் காட்டில் இருந்து வெளியேற அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் 12 நாட்கள் காட்டிற்குள்ளேயே இருந்துள்ளார்.

அந்த 12 நாட்களும் அவர் காட்டில் உள்ள பூச்சிகளைச் சாப்பிட்டு அவர் உயிர் வாழ்ந்திருக்கிறார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவர் மயக்கமடைந்த நிலையில் காட்டுக்குள் விழுந்து கிடந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற விவசாயி ஒருவர் இவரைப் பார்த்துவிட்டு, உடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர் அவர், பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இவர் அமேசான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், அதனால் அந்தக் காட்டைப் பற்றிச் சில விடயங்கள் இவருக்குத் தெரிந்திருந்ததாலுமே இவரால் பிழைக்க முடிந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .