2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தப்பிச்சென்ற கைதியை பிடிப்பதற்காக 4000 பொலிஸார்: 850 வாகனங்கள்

Kogilavani   / 2014 ஜனவரி 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலசலக்கூடம் செல்வதாக கூறிவிட்டு தப்பிச் சென்ற கைதியை பிடிப்பதற்காக 4000 பொலிஸார் மற்றும் 850 வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட சம்பவமொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த சுகிமோடோ என்ற கைதியை பிடிப்பதற்காக இத்தனை பொலிஸார் மற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜனவரி 2ஆம் திகதி பெண் ஒருவர் சிலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவரது பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் சுகிமோடோ கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

இவரை ஜப்பான் பொலிஸார் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டுச் சென்றபோதே மேற்படி நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இவர் பொலிஸாரிடம், மலசலக்கூடம் சென்றுவருவதாக கூறி தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதி தப்பியச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் 4000 பொலிஸார், 850 வாகனங்கள், ஹெலிகொப்டர்கள், படகுகள், மோப்ப நாய்கள் என்பவை பயன்படுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனாலும் இதுவரை மேற்படி கைதி கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .