2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆண்களை வற்புறுத்தி உடலுறவில் ஈடுப்பட வைத்த பெண் மரணம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலர்களை தன்னுடன் பலமுறை உடலுறவில் ஈடுப்படுமாறுகோரி வற்புறுத்தி வந்தது மட்டுமின்றி காதலர்களுக்கு பாலியல் தொந்தரவுகளை கொடுத்துவந்த பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பமொன்று ஜேர்மனில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பெண் தனது வீட்டிலிருந்தே  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுகபோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற குறித்த பெண் வாட்டசாட்டமான ஆண்களை வலைவீசி தன்பக்கம் இழுத்து வீட்டுக்கே அழைத்து சென்று அதுவும் வீட்டிலேயே பூட்டிவைத்து அவர்களை தன்னுடன் உடலுறவில் ஈடுபட வைத்துள்ளார்.

ஜேர்மனியை சேர்ந்த என்ஜே கார்பனிக் என்ற 47 வயது பெண்ணே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததுடன் அவருடைய வீட்டிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது வலையில் சிக்கிய ஆண்களில் பலர் அவரது பிடியிலிருந்து ஒருவாறு தப்பித்துவந்து அவரது இத்தகைய செயற்பாடுகள் குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

தன்னை ஒரேநாளில் எட்டுத் தடவைகள் உடலுறவில்; ஈடுப்படுமாறு பலவந்தப்படுத்தியதாகவும் இதனால் அப்பெண்ணின் வீட்டின் பெல்கனி வழியாக தான் தப்பித்து வந்ததாகவும் இப்பெண்ணின் வலையில் சிக்கிய முதலாவது  ஆணொருவர்  பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இப்பெண்ணின் பிடியில் சிக்கிய ஆபிரிக்காவைச் சேர்ந்த 35 வயது நபரொருவர் 36 மணித்தியால நெருக்கடியிலிருந்து பொலிஸாரின் உதவியுடன் வெளியேறிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இந்த பெண்ணை நான் பஸ்ஸில் சந்தித்தேன். அவர் என்னை அழைத்திருந்தார். அது உண்மையில் நரகமானது என்று தெரிவித்த மேற்படி நபர் வெளியாறின் உதவியையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்களின் பின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மேற்படி பெண் உளநல  சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

'தனக்கு நாளொன்றுக்கு 10 தடவைகள் உடலுறவுக்கொள்ள வேண்டும்' என அப்பெண் சமூகநல ஆர்வலர்களிடம்; தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் இறுதியாக தனது தாயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவர் எவ்வாறு மரணமடைந்தார் என்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

You May Also Like

  Comments - 0

  • Moon Thursday, 13 December 2012 01:46 AM

    சே...முன்னமே அவட அட்ரஸ் தெரியாமப் போச்சே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .