Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 டிசெம்பர் 26 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் 1953 ஆம் ஆண்டு போக்குவரத்து பொலிஸாரினால் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு டொலர் அபராதத்தை 50 வருடங்களுக்குப் பின் செலுத்தியுள்ளார். தனது மனச்சாட்சியை தூய்மையாக வைத்துக்கொள்வதற்காக இந்த அபராதத்தை செலுத்தத் தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.
ஹவுஸ்டன் நகரைச் சேர்ந்த டேல் கிரவ்போர்ட் என்பவர் 1953 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி இராணுவத்தில் பணியாற்றியபோது தனது காரை தவறான இடத்தில் செலுத்தியமைக்காக மேற்படி அபராத சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
அப்போது அவர் அந்த அபராதத்தை செலுத்த மறந்துவிட்டார்.
அண்மையில் தனது பழைய ஆவணங்களை பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, மேற்படி அபராத சீட்டை கண்டெடுத்த அவர், குறித்த அந்த நகர அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
மேற்படி அபராதத்; தொகை சிறியதாக அவதானிக்கப்படாத தொகையாக இருந்தாலும் கூட தனது மனசாட்சியின்படி அதனை தான் செலுத்தியாக வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹவுஸ்டன் நகர மேயர் அன்னிஸ் பார்கர் இது குறித்து தெரிவிக்கையில் அவர் கிரவ்போரிடின் பணத்தொகையை தானே நேரடியாக பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். நகர சபைக்குரிய பணத்தை செலுத்தாமல் தவிர்ப்பவர்களுக்கு மத்தியில் கிராவ்போர்ட் ஓர் முன்னுதாரணமாக திகழ்வதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மேயர் அறிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago
meenavan Tuesday, 27 December 2011 01:43 AM
ஒரு டாலர் தண்டனை ஐம்பது வருடங்களுக்கு பிறகு மனதை உறுத்தி உள்ளதென்றால், நம் நாட்டு மக்களின் நிலையை குறிப்பாக அரசியவாதிகள் எவ்வாறு இதை கணிப்பார்களோ?
Reply : 0 0
usaidh Tuesday, 27 December 2011 02:40 AM
எத்தனை பேர் மக்களின் சொத்தை சூறையாடி விட்டு நல்லவர்கள் போன்று இருக்கிறார்கள்? இவர்களை அல்லா ஒருவன் பார்துக்கொன்றிருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
7 hours ago