2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆபாச வீடியோ கேமின் விபரீதம்: 8 வயது தங்கையை வல்லுறவு புரிந்த அண்ணன்

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபாச வீடியோ கேம்ஸ் விளையாடிய 13 வயது சிறுவன் அவற்றை செயல்படுத்த நினைத்து தனது 8 வயது தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'எக்ஸ் பாக்ஸ்' இணையதளத்தின் வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்த பின்பு அதனை நடைமுறைப்படுத்தி பார்க்க விரும்பியுள்ளான் அந்த சிறுவன். அதற்காக தனது 8 வயது சகோதரியை தேர்வு செய்தான். மிகவும் சின்னப் பெண் என்பதால்,நடந்ததை மீண்டும் நினைவில் வைத்திருக்கமாட்டாள், யாரிடமும் கூறமாட்டாள் என்று நினைத்து தனது தங்கையை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளான்.

இதனை அடுத்து சிறுவனை கைதுசெய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அச்சிறுவன் குற்றத்தை ஒப்பு கொண்டான். இதனை அடுத்து பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குற்றத்தை ஒப்புகொண்டமைக்கு அமைவாக சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டது. அவன் தனது உறவினர்களுடன் அனுப்பப்பட்டான். எனினும், சகோதரியிடம் இருந்து தனித்து வைக்கப்பட்டு உள்ளான்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்நாட்டு அரசு, 2014ஆம் ஆண்டு இறுதிக்குள், வீடியோ கேம்ஸ் மற்றும் கணினி  விளையாட்டுகள் உட்பட இணையக் கருவிகள் கொண்டு வயதுக்கு வந்தோர் பார்க்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதுபோன்ற காட்சிகளை பெற்றோர் அனுமதியுடன் பார்க்கும் வகையில் தடுப்பு முறைகளை பயன்படுத்தலாம் என்று  இது தொடர்பில் எக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

'இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எங்களது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள தயாரிப்புகள், பெற்றோர் தங்களது குழந்தைகள் விளையாட ஏற்றது எது என்றும் இணையதளத்தில் எதனை பார்க்கலாம் என்றும் அனுமதி அளிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க ஏற்ற முறையில் உள்ளவை ஆகும். எனவே, குழந்தைகளை தவறான வழியில் செல்லாத வகையில் பெற்றோர் எளிதில் கட்டுப்படுத்தலாம்' இந்த வீடியோ கேம்ஸ் தயாரிப்பை வெளியிட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக, எக்ஸ் பாக்ஸ் கணக்கில் சிறுவர்கள் பார்க்கும்போது, அது இன்டர்நெட் பயன்பாட்டை தானாக ஆப் செய்து விடும் வாய்ப்பை வழங்கியுள்ளது. எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகள் செட்டிங்சில் ஏதேனும் மாற்றி உள்ளனரா என்று கவனமுடன் பார்க்க வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம், 12 வயது சிறுவன் ஒருவன், 10 வயதிற்கு குறைந்த தனது சகோதரியை 3 முறை வல்லுறவுக்க உட்படுத்தியுள்ளான். அவன் படித்த பள்ளியிலேயே ஆபாசப்பட பாலியல் தொடர்பான இணையதளத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளான். பின்னர் அதனை செயல்படுத்தி பார்க்க நினைத்த அவன் இத்தகைய குற்ற செயலில் ஈடுபட்டு உள்ளான்.

ஒரு வருடமாக குறித்த தவறான நடத்தையில் ஈடுபட்ட நிலையில், சிறுமி தனது குடும்ப உறுப்பினரிடம் இவ்விடயத்தை தெரிவிக்கவே அதனை அடுத்து தான் சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், 3 வருடங்கள் அந்த சிறுவனுக்கு சீர்திருத்த தண்டனை வழங்கப்பட்டது. அவன் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வீட்டில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X