2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கணவனை 80 முறை கத்தியால் குத்தி கொலைசெய்த பெண்

Kogilavani   / 2014 ஜனவரி 28 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பச்  சண்டையில் 48 வயதுடைய கணவனை 80 முறை கத்தியல் குத்தி கொலைசெய்த 35 வயதுடைய பெண்ணை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் அருகேயுள்ள நங்கிஸ் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப்பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சரமாறியான கத்திக்குத்து காயங்களுடன் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு அவசர அழைப்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். இதன்போது குறித்த நபர் பரிதாபகரமாக உயிரிழந்து காணப்பட்டுள்ளர். 

இதனையடுத்து அவ்வீட்டில் இருந்த பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்துள்ளதுடன் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அப்பெண், தனக்கும் கணவனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் ஆத்திரத்தில் அவரை 80 முறை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இடையில் என்ன காரணத்தில் சண்டை ஏற்பட்டது என்பதை அப்பெண் பொலிஸாருக்கு கூற மறுத்துள்ளார்.

கொலைக்கான காரணத்தை கண்டறிய தற்போது அப்பெண் உளவியர் நிபுணரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இச்சம்வம் தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .