2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பிரசவத்துக்கு முன்னரான அந்த 9 மாதங்கள்

Kogilavani   / 2012 நவம்பர் 26 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்ணொருவர் கர்ப்பம் தரித்ததன் பின்னர் என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனது மனைவியின் கர்ப்ப வளர்ச்சியை கட்டம் கட்டமாக ஒருவர் படம் பிடித்துள்ளார். 

தனது மனைவி கர்ப்பம் தரித்தது முதல் ஒவ்வொரு மாதங்களும் அவரது உடல் வளர்ச்சியை படமாக்கி அதனை வீடியோவாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ 300,000 பேரை கவர்ந்துள்ளது.

டோமர் என்ற நபரே தனது மனைவியான ஒஸோர் கிறீன்லையே பல்வேறு கோணங்களில் பல்வேறான எண்ணக்கருக்களை மையப்படுத்தி இவ்வாறு புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இவர், ஒஸோர் கிறீன்செலின் உடல் மாற்றத்திற்கு ஏற்ப 9 மாதங்களில் 1000 புகைப்படங்களை எடுத்துள்ளார்.

கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வெவ்வேறு கோணங்களில் கிறீன்செல் படம்பிடிக்கப்பட்டுள்ளார். இந்த புகைப்படங்களை வைத்து அவர் மெதுவாக நகரக்கூடிய வீடியோ ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களானது இருவரினதும் முதல் குழந்தையான ஹெம்மா பிரசவிக்கப்பட்ட பின்னர் அவர் பத்துமாதம் கருவினுள் இருந்த கதையை விபரிக்கும் வரலாற்று தகவலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டத்தை டொம்மர் தனது வலைதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .