2025 மே 13, செவ்வாய்க்கிழமை

14 இறாத்தல் நிறையுடன் பிறந்த குழந்தை

Kogilavani   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெண்ணொருவர் 14 இறாத்தல் நிறையுடைய குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.  

அமெரிக்கா, புளொரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு 14 இறாத்தல் நிறையும் 7.6 அவுன்ஸும் கொண்ட குழந்தையை பிரசவித்துள்ளார்.

சோன் இசெய்யா லோரன்ஸ் என்றழைக்கப்படும் மேற்படி குழந்தையானது 22, 1/2  அங்குல நீளமுடையதாக காணப்படுகின்றமை குறிப்பிடுகின்றது.

இது தொடர்பில், அக்குழந்தையின் தாயான நிகியா மைக்கல் நெல்லி குறிப்பிடுகையில், நான் குழதையை கையிலெடுத்து கொஞ்சும் வரை காத்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.

ஏழு நாட்களுக்கு முன் அக்குழந்தை சிசேரியன் சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டது. கிறிஸ்மஸ் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தாயும் குழந்தையும் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X