Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 19 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருகுவேயின் தலைநகரான மொன்டிவீடீயோவிலுள்ள இரு வைத்தியசாலைகளில் 16 நோயாளிகளை கொலை செய்தமையை ஒப்புக்கொண்ட இரு ஆண் தாதியர்கள், கொலை வழக்கு விசாரணையை எதிர்நோக்குவதாக அந்நாட்டு நீதிபதியொருவர் கூறினார்.
இதில் ஒரு ஆண் தாதி 5 நோயாளிகளையும் மற்றைய நபர் 11 பேரையும் கொலை செய்துள்ளதாக நேர்காணலொன்றின்போது நீதிபதியான ரோலன்ட் வொமேரோ தெரிவித்துள்ளார்.
மேற்படி இரு ஆண் தாதியரகளும் சுயாதீனமாக செயற்பட்டதாகவும் இவர்களில் ஒருவருக்கு ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்தாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் சுகயீனம் காரணமாக அவதிப்படுவதை பார்க்கமுடியாத காரணத்தினால் மேற்படி தாதியர்கள் இருவரும் இவ்வாறான கொலைகளை மேற்கொண்டுள்ளதாக தாதியர்கள் இருவரும் கூறினரென நீதிபதி மேலும் கூறினார். ஆனால் இந்நோயாளிகள் அனைவரும் கடுமையான நோயுடையவர்களாக இருக்கவில்லை எனவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago