Menaka Mookandi / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு திருப்பெருந்துறைப் பிரதேசத்தில் நேற்றிரவு வந்த 10 அடி நீளமான வெங்கனாந்தி எனப்படுகிற பெரிய பாம்பு ஒன்று அப்பிரதேச இளைஞர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள மாந்தீவு பிரதேசத்திலிருந்து இந்த பாம்பு வந்திருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு விமான நிலையத்தின் பின் பகுதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை வேலைத்தளப் பகுதியில் இந்தப் பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கோழி, ஆடு போன்ற மிருகங்களை இப்பாம்பு பிடித்துத் தின்றுவந்ததாக தெரிகிறது. இந்தப் பாம்பினை மட்டக்களப்பிலுள்ள பூங்கா ஒன்றிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
.jpg)

4 hours ago
6 hours ago
xlntgson Thursday, 21 April 2011 09:58 PM
மலைப்பாம்பைப் போன்று இது விஷம் இல்லாத பாம்பு தானே?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago