2025 மே 15, வியாழக்கிழமை

இளவரசர் வில்லியமின் திருமணத்தை முன்னிட்டு வயாகரா பியர்

Kogilavani   / 2011 ஏப்ரல் 20 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வயாகரா கலந்த பியர் வகையொன்றை பிரித்தானிய மதுபான நிறுவனமொன்று தயாரித்துள்ளது.  பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியமின் திருமண வைபவத்தை முன்னிட்டு இந்த வயாகரா பியர் தயாரிக்கப்பட்டதாக என புரூவ்டோக் எனும்  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வகை 3 போத்தல் பியரை அருந்தினால் ஒரு வயாகரா குளிசை உட்கொண்டமைக்கான பலன் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறுகிறது.

'அரைஸ் பிரின்ஸ் வில்லி' (எழுக இளவரசர் வில்லி) என இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள் இந்த பியர் போத்தலில்  பொறிக்கப்பட்டுள்ளன.

இளவரசர் வில்லியமின் திருமண தினத்திற்காக பல போத்தல் பியர்களை அவருக்கு மேற்படி நிறுவனம் அனுப்பியுள்ளது.

'இந்த போத்தல் குறிப்பிடுவது போல் இது திருமண நிகழ்வை முழுமையாக்குவதற்கானது, நினைவுச் சின்னத்திற்காக அல்ல' என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலா 10 ஸ்ரேலிங் பவுண்கள் பெறமதியான இந்த பியர் போத்தல்களில் 40 மட்டுமே ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி இணையத்தளம் மூலம் இது பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த போத்தலின் வீரியம் காரணமாக, ஆளுக்கு ஒரு போத்தல் என்ற அளவிலேயே இது விற்கப்படவுள்ளது. இந்த திட்டம் வெற்றியளித்தால் அதை தொடர்ந்து முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • joji Saturday, 23 April 2011 08:38 PM

    williams please refer bible " proveb chap no 1 vesers no 8, asisah chapter no 5 வேர்செஸ் நோ 18.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .