Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது திருமணத்தின்போது, நிர்வாணக் கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி அதிக எண்ணிக்கையானோரால் பார்க்கப்பட்ட நிலையில் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நிர்வாண கோலத்திலான திருமண புகைப்படங்களை எடுத்துக்கொள்வது சீனாவைச் சேர்ந்த இளம் தம்பதிகளிடையே ஒரு பெஷனாகி வருகிறது. ஆனால் பொதுவாக இப்புகைப்படங்கள் மணமகள் மற்றும் மணமகனின் தனிப்பட்ட பாவனைக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் மேற்படி பெண் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்புகைப்படங்கள் சீனாவின் பெரும்பாலான ஊடகங்களிலும் இடம்பிடித்துள்ளன. அவற்றில் ஒரு பத்திரிகை இப்புகைப்படங்களை எடுத்துக்கொண்ட அனுபவம் குறித்து மேற்படி மணமகள் விபரித்தால் அவருக்கு 10,000 சீன யுவான்களை (சுமார் 170,000 இலங்கை ரூபா) வெகுமதியாக வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
சீனாவின் சங்காய் மாகாணத்திலுள்ள ஸோபு பூங்காவில் இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. இப்புகைப்படங்களை சீனப் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். இம்மணப்பெண்ணும் புகைப்படபிடிப்பாளரும் இனங்காணப்பட்டால் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்த குற்றத்திற்காக கைது செய்யப்படுவார்கள் என சீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'பொதுவாக இத்தகைய நிர்வாண திருமண புகைப்படங்களில் பூங்கொத்து அல்லது நாடாக்கள் எதையாவது பயன்படுத்தி அந்தரங்க பகுதிகளையாவது மறைத்துக்கொள்வார்கள். ஆனால் இப்புகைப்படங்களில் எதுவுமே மறைக்கப்படவில்லை' என சீன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
12 minute ago
22 minute ago
32 minute ago
36 minute ago
naleem Sunday, 21 August 2011 05:47 AM
காலம் செய்த கோலமடா கடவுள் செய்த.............
Reply : 0 0
xlntgson Monday, 22 August 2011 09:26 PM
இணைய தளங்களில் வெளியிட படங்களை அனுப்பப் பிரியப்பட்டால் இது தான் நடக்கும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
32 minute ago
36 minute ago