Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபலங்கள் இயற்கைகக்கடன் கழிப்பதுபோல் பொம்மைகளை உருவாக்குவது ஸ்பெய்னின் கடலோனியா முதலான பிராந்தியங்களில் மிக பிரசித்தமானதாகும்.
ககேனர் எனும் இந்த பொம்மைகள் பொதுவாக வருட இறுதி விடுமுறைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
மற்றவர்களை இது முகம்சுளிக்க வைத்தாலும் ஸ்பானிய கலாசாரத்தில் ஒரு பாரம்பரிய வேடிக்கை கலாசாரமாக உள்ளது. புதிய வருடத்தில் இனவிருத்தி, நம்பிக்கை, சுபீட்சம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டிலிருந்து இத்தகைய பொம்மைகள் பிரசித்தமானவையாக உள்ளன.
இம்முறை கேட்லோனியாவில் ககேனர் பொம்மை வேடிக்கையில் சிக்கியுள்ள பிரபலங்கள் பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் ஆகியோராவர். இவ்விருவரும் கழிவறையில் கால் மடித்து அமர்ந்திருப்பதுபோல் சிற்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் மகாராணியார், இளவரசர் பிலிப், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பாடகர் எல்விஸ் பிரெஸ்லி, மைக்கல் ஜக்ஸன் மற்றும் கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் ஆகியோரும் இவ்வாறு நகைச்சுவை பொம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
43 minute ago