2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ரயிலில் பயணித்த பெண்மீது சிறுநீர் போத்தலை எறிந்த நபருக்கு வலைவீச்சு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் மீது ரயில் பாதையருகில் நின்ற நபரொருவர் தனது சிறுநீரை நிரப்பிய போத்தலை வீசியெறிந்துள்ளார். இச் நபரை கைதுசெய்யும் நடவடிக்கையில் லண்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டனின் தென் பிராந்தியமான பிளெம்ஸ்டீட் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், ரயிலின் ஜன்னலோர ஆசனத்தின் அருகில் அமர்ந்த நிலையில் பயணித்துள்ளார். இதன்போது மேற்படி நபர் தனது சிறுநீரை நிரப்பி வைத்த போத்தலை குறித்த பெண்ணின் தலைக்கு நேராக எறிந்துள்ளார்.

மேற்படி காட்சி பதிவு செய்யப்பட்ட வீடியோவை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மேற்படி ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட தயாரான வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புலனாய்வு பொலிஸ் அதிகாரியான ட்றேஷி மேஷர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • படிக்காதவன் Friday, 17 August 2012 01:30 PM

    எப்பவுமே கைவசம் அயிட்டத்தோடதான் அலைவார் போல ஆசாமி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .