2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உடலை வளைக்கும் திறமையை புகைப்படங்களாக இணையத்தளத்தில் வெளியிட்ட பெண்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 05 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவில் கல்லூரி மாணவி ஒருவர் நெகிழும் தன்மைமிக்க பொருளை போன்று தனது உடலையும் எளிதில் வளைக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டு பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த அதிகமான பெண்கள் தனது உடலை மிக எளிதில் வளைத்து எடுக்கும் வலிமைமிக்கவர்களாக விளங்குகின்றனர். இது சீனாவில் புகழ்மிக்க செயற்பாடாக காணப்படுகின்றது.

இப்புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டப்பின் மேற்படி கல்லூரி மாணவி சீனாவில், அனைவரின் மனங்களிலும் பிரகாசிக்கும் நட்சத்திரமாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவைச் சேர்ந்த அதிகமான பெண்கள் தினசரி செயற்பாடுகளில் இந்த பயிற்சியை முன்னெடுப்பவர்களாக காணப்படுகின்றனர். சிலர் தமது உணவை உற்கொள்ளும்போதும் தொலைபேசி அழைப்பின்போதும், உறக்கத்தின் போதும் இவ்வாறு இந்த பயிற்சிகளை முன்னெடுப்பவர்களாக காணப்படுகின்றனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .