2025 மே 14, புதன்கிழமை

மகளுக்காக வாடகை தாயாக மாறிய தாய்

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


தான் ஈன்றெடுத்த மகளுக்கு  குழந்தை ஒன்றை பிரசவிக்க முடியாது என்பதை அறிந்துக்கொண்ட 58 வயதான தாயொருவர் வாடகை தாயாக மாறிய சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

லண்டனை சேர்ந்த கெதி டோன்லி என்ற 58 வயது பெண்ணே இவ்வாறு தனது மகளுக்காக வாடகை தாயாக மாறியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் ஏலவே 6 பேரபிள்ளைகளை கொண்டுள்ளார். இந்நிலையில் 7 ஆவது பேரபிள்ளைக்காக தானே வாடகை தாயாக மாறியுள்ளார். இவர் தற்போது 6 மாத கர்பிணியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி பெண்ணின் மகளான பிஸ்செரும் அவரது கணவரான ஜெமியும் திருமணம் முடித்து இரண்டு வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வாழ்ந்துள்ளனர். இதன்போது பிஸ்செரின் கர்ப்பை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவரால் குழந்தையொன்றை பிரசவிக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைக்கேட்டு பிஸ்செர் சோர்வடைந்தபோது அவரது தாய் டோன்லி தான் குழந்தையை பிரசவித்து தருவதாக தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் நான் வீட்டுக்கு வந்தபோது எனது தாய் தயக்கமில்லாமல் குழந்தையை பிரசவித்து தருகிறேன் என்ற கூறினார். அவர் அதற்கு சற்றும் தயங்கவில்லை என பிஸ்செர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நான் வருத்தப்படவில்லை. என் வாழ்க்கையின் அடுத்த 9 மாதங்களை பற்றி நினைத்தேன் என டோன்லி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • OBAMA Sunday, 18 November 2012 10:26 AM

    நல்ல தாயும் மகளும். இதைப்படித்துவிட்டு மக்களே என்ன நினைக்கிறீர்கள்? இதற்கு தான் சொல்வார்களே உலக அழிவு நெருங்கிவிட்டது என்று அது இதுதான்.

    Reply : 0       0

    hamm Sunday, 18 November 2012 01:32 PM

    உச்சகட்ட விபச்சாரம் இது.

    Reply : 0       0

    ikmsm Sunday, 18 November 2012 01:34 PM

    சீச்சீ அருவருக்கத்தக்க சமூகம் இவர்கள்தானப்பா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X