2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கால்களை நீட்டிகொண்டு காரை செலுத்திய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்களை ஜன்னலுக்கு வெளியே நீட்டிவாறு நெடுஞ்சாலையொன்றில் காரை செலுத்திய இளைஞர் ஒருவரை தேடும் பணியில் அவுஸ்திரேலிய பொலிஸார் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த இளைஞனின் புகைப்படமானது இணையத்தளத்தில் வெளியானதை தொடர்நதே பொலிஸார் இவ்விளைஞனை தேடும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் சாரதி இருக்கையில் அமர்ந்த நிலையில் கால்கள் இரண்டையும் வெளியில் நீட்டியவாறு வாகனத்தை வேகமாக செலுத்துவது புகைப்படமொன்றில் பதிவாகியுள்ளதுடன் குறித்த படம் இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வழியாக பயணித்த மற்றுமொரு பயணியே குறித்த காட்சியை புகைப்படமாக எடுத்துள்ளார்.

'நான் எந்த காட்சியை பார்க்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை' என மேற்படி இளைஞனின் செயற்பாட்டை புகைப்படாமக எடுத்த ஸ்டீவர்ட் என்ற பயணி கூறியுள்ளார்.

'அவ் இளைஞனின் வலது கால் மட்டுமே வெளியில் தொங்குகிறது என்று நான் நினைத்தேன். ஆனால், இரண்டு கால்களையும் வெளியில் தொங்கவிட்டவாறு மேற்படி இளைஞன் காரை செலுத்தினான்.

காரினுள் மேலும் இருவர் காணப்பட்டனர். அவன் காரை மிக வேகமாக செலுத்தினான்.

பார்ப்பதற்கு இளமையானவனாக மேற்படி இளைஞன் காணப்பட்டார். நெடுந்தெருக்களில் இவ்வாறு வாகனத்தை செலுததி மற்றவர்களுக்கு இடையூறை ஏற்படுத்ததுவதை நான் விரும்பவில்லை' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X