2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மார்பகங்களால் காதலனை கொன்ற பெண் நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஜனவரி 16 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர்  காதலனின் முகத்தை தனது மார்பகங்களுக்கு நடுவே வைத்து அழுத்தி, மூச்சுத் திணறச் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, வொஷிங்டன் எவரெட் பகுதியைச் சேர்ந்த டோனா லாங்கே என்ற 51 வயது பெண்ணே தன்னுடைய 51 வயது காதலனை இவ்வாறு மூச்சு திணறச்செய்து கொலை செய்துள்ளார்.

மேற்படி இருவரும் தமது வீட்டில் மது அருந்திய நிலையில் தனது நண்பர்களுடன் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டோனாவுக்கும் அவரது கணவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பாடு அது வாக்குவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த டோனா தன்னைவிட பருமன் குறைந்த தனது காதலனை கீழே தள்ளி தனது மார்பகங்களால் அவரை மூச்சுத்திணறச் செய்து கொலை செய்துள்ளார்.

இவர் இக்கொலையை மேற்கொள்ளும்போது அப் பெண்ணின் மூன்று பெண் நண்பிகளும் மது அருந்திய நிலையில் அருகில் காணப்பட்டுள்ளனர்.

தனது காதலன் மூச்சற்று கிடப்பதை உணர்ந்த டோனா உடனடியாக எம்பியுலன்ஸ்க்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். எப்;படி இருப்பினும் எம்பியுலன்ஸ் வண்டி வருவதற்குள் டோனாவின் காதலன் உயிரிழந்தே காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து டோனாவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது உண்மைச்சம்பவம் தெரியவந்துள்ளது.

இதேவேளை டோனாவின் உடலிலும் காயங்கள் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தன்னால் ஊகித்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பொலிஸார் மேற்படி மேற்படி பெண் நண்பிகளிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி...

உடல் உறவின் போது கொலை முயற்சி

You May Also Like

  Comments - 0

  • K.Balendran Thursday, 17 January 2013 08:15 AM

    ஆண் ஜென்மமே கவனம். வாய்க்குப் பக்கத்தில்தான் மூக்கு இருக்கிற்து.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X