2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உலகத் தலைவர்களின் பொருளாதார மறுமலர்ச்சி கூட்டத்தில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 28 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகத் தலைவர்களின் பொருளாதார மறுமலர்ச்சி கூட்டத்தில் பெண்கள் அரைநிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டமை சுவிட்சர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து, டேவோஸ் நகரத்தில் 45 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் தொழிலதிபர்களும் கலந்துகொண்ட பொருளாதார மறுமலர்ச்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இக்கூட்டத்தினிடையே இளம்பெண்கள் திடீரென தங்கள் மேலாடைகளை  களைந்து அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

பெண்களின் எதிர்கால உரிமைகளை உறுதிபடுத்தவேண்டும் என கோரி இப்பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பல பெண்கள் தமது உடலில் பெண்ணுரிமை தொடர்பான வாசகங்களை வர்ணப்பூச்சியில் எழுதிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட நேர முயற்சிகளுக்குப் பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அப்பெண்களை வெளியேற்றியுள்ளனர்.

'உலகில் உள்ள பல பெண்கள் இணைந்து இத்தகைய போராட்டத்தில் குதித்துளளோம். ஏனெனில் ஆண்களின் கண்கானிப்பின் கீழ் இருந்து நாம் சோர்ந்து விட்டோம். அவர்கள் உண்பதும் குடிப்பதிலுமே தமது காலத்தை போக்குகின்றனர். பெண்கள் குறித்த அக்கறை ஆண்களுக்கு இல்லை' என இப்போராட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த சிவ்செங்கோ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X