2025 மே 13, செவ்வாய்க்கிழமை

'போலோ' குறித்த முறைகேடான எண்ணத்தை மாற்ற உறைபனியில் போலோ காட்சி

Kogilavani   / 2013 ஜனவரி 30 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையான உறைபனியில் நின்று சீனாவைச் சேர்ந்த போலோ நடனக்கலைஞர்கள் தமது நடனத்திறமையை பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் இத்தகைய செயற்பாடானது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் போலோ நடனம் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் முறைகேடான எண்ணங்களை நீக்கவேண்டும் என்பதற்காக மேற்படி கலைஞர்கள் இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது சீனாவில் தேசிய போலோ நடன போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. ஆனபோதும் போலோ நடனத்துறையானது 'பாலியல் தொழில்'  என்ற ரீதியில் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

'போலோ நடனமானது ஜிம்னாஸ்டிக் பயிற்சியை போன்றது' என்பதை வலியுறுத்துவதற்காக சீனாவின்; தேசிய போலோ அணியில் இடம்பெற்றிருக்கும் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இணைந்து போலோ கண்காட்சி ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இக்கண்காட்சியில் உறைபணியில் நின்று அவர்கள் தமது போலோ நடனக்காட்சியை அரங்கேற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் ஒரு விளையாட்டு வீரர்களை போன்றே பயிற்றுவிக்கப்படுகிறோம். இப்பயிற்சியில் பாலியல் சார்ந்து எதுவும் இல்லை. இந்த நடனமானது ஜிம்னாஸ்டிக்கை போன்றது' என அவ்வணியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'மக்கள் எதிரான கருத்துக்களை கூறுவதற்கு முன்பாக எம்மை அவதானிக்க வேண்டும். நாங்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் அல்ல' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'போலே நடனக்கலைஞர்கள் மிகவும் அரப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள்' என பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X