2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மிருகங்களின் இரத்தத்தைக் குடிக்கும் பெண்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 26 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிருகங்களின் இரத்தத்தைக் குடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர், தனது மகளின் கழுத்தை நெரிக்க முற்பட்ட நிலையில் கணவரால் கட்டுப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று தமிழ்நாடு, கோயம்புத்தூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாய்கள் மற்றும் 7 கோழிகளின் இரத்தத்தைக் குடித்துள்ள மேற்படி பெண்,  வைத்தியசாலையிலும் தனக்கு இரத்தம் வேண்டும் என்று கத்தி கூச்சலிட்டுள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

கோயம்புத்தூர், மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த ராணி என்ற பெண்ணே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். அவருக்கு 4 வயதில் பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டதாக என்று கூறப்படுகின்றது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் முழ்கடித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார் ராணி. இதைப் பார்த்த அவரது கணவர் ராஜு, ஓடிச்சென்று குழந்தை பறித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் ராணி தனது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதை தடுத்த கணவரைப் பார்த்து எனக்கு ரத்தம் வேண்டும் என்று அவர் அலறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை வீட்டுக்கு அருகே சுற்றிய ஒரு நாயைப் பிடித்துக் கொன்று அதன் இரத்தத்தையும் குடித்துள்ளாராம். இதையடுத்து ராஜு தனது மனைவிக்கு வைத்தியம் செய்ய அவரை பொள்ளாச்சி அம்பராம்பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் இரத்தம் கேட்ட ராணி, வீதியில் சென்ற நாயொன்றைக் கொன்று இரத்தம் குடித்துள்ளார்.

அதன் பிறகு மேலும் இரத்தம் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்த 7 கோழிகளின் தலையைக் கடித்து அவற்றின் இரத்தத்தை குடித்துள்ளார். ராணியின் செயல்களால் அவரது குடும்பத்தினர் பீதியடைந்து அவரை கோயம்புத்தூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X