2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மேலாடையற்ற வீடியோ காட்சிகள் வெளியானதால் பதவி துறந்த பெண்

Kogilavani   / 2013 ஏப்ரல் 18 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலாடையற்ற வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வெளியானதால் பெண் அரசியல்வாதியொருவர் தான் பதவி வகித்த கட்சி உரிமையிலிருந்து இராஜிநாமா செய்த சம்பவம் ஸ்பானிஸில் இடம்பெற்றுள்ளது.

ஓல்விடோ ஹோர்மிகோஸ் என்ற 42 வயது பெண்ணே இத்தகைய நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இவர், ஸ்பானிஸில் உள்ள சோசலிஸ தொழிலாளர் கட்சியில் அங்கம் வகித்து வந்தார்.

இந்நிலையில் இவரது மேலாடையற்ற படங்களுடன் கூடிய வீடியோ காட்சியானது இணையத்தளங்களில் துரதிஷ்டவசமாக வெளியானதுடன் சஞ்சிகை ஒன்றின் முன் அட்டைப்படத்திலும் அவை பிரசுரமாகியுள்ளன.

இதனால், அவர் தனது கட்சி உரிமையிலிருந்து கட்டாயத்தின்பேரில் பதவி விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் அரசியல்வாதி மேலாடை அற்ற வீடியோ காட்சிகளை தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த நண்பர் அக்காட்சிகளை உடனடியாக பலருக்கு அனுப்பி வைத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் இவ் வீடியோ காட்சிகள் தரவேற்றம் செய்யப்பட்டதால் 6,500 இற்கும் மேறட்பட்டோர் அக்காட்சிகளை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .