2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெண்களின் உள்ளாடைகளை திருடியவர் நெருக்கடியில்

Kogilavani   / 2013 ஜூன் 12 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடுகளை உடைத்து பெண்களின் உள்ளாடைகளை திருடிய நபர் ஒருவர் மூன்று வருட சிறைதண்டனையை எதிர்கொண்ட சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான மார்க் கோக்ஸ் என்ற 22 வயது நபரே இத்தகையை தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

இவர் இதுவரை 50 (ஜோடி) உள்ளாடைகளை திருடியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கோக்ஸ் தனது பெண் நண்பிகளின் உள்ளாடைகளை திருடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதற்கமைவாக, கோக்ஸ் ஒருநாள் தனது பாடசாலை நண்பியான எமா பின்சஸ் (வயது- 21) என்பவரது உள்ளாடையை திருடியபோது பொலிஸில் மாட்டிகொண்டுள்ளார்.

எமா பின்சஸ் ஒருநாள் இரவு விருந்தொன்றிற்காக வெளியில் சென்றுள்ளார். இதன்போது திருட்டுத்தனமாக எமாவின் வீட்டினுள் நுழைந்த கோக்ஸ் அவரது உள்ளாடைகளை திருடிச் சென்றுள்ளார்.

தனது உள்ளாடை காணாமல் போயிருப்பதை எமா இரண்டு வாரங்கள் கழித்தே அறிந்துகொண்டுள்ளார்.

அதன்போது, தான் இரவு விருந்திற்காக சென்றவேளை கோக்ஸ் தனது கையடக்கதொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தது நினைவுக்கு வர எமா, கோக்ஸ் மீது சந்தேகம்கொண்டு தனது உள்ளாடை காணாமல் போன விடயத்தை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

கோக்ஸின் வீட்டை சோதனை செய்து பொலிஸார் அவனது கட்டிலின் கிழ் பரந்தளவில் உள்ளாடைகள் கிடப்பதை கண்டு அதர்ச்சிடையந்துள்ளனர்.

இதேவேளை, ஸ்பிரே, பொலிஸார் அணியும் தலைக்கவசம், கைவிலங்கு, ஜெக்கெட் உட்பட பல பொருட்களையும் இதன்போது பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட கோக்ஸ் மன நலமருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. பின்னர் கோக்ஸிற்கு உள்நாட்டு நீதிமன்ற நீதிபதி 3 வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

'எந்த பொருளை திருடியுள்ளார் என்ற குற்றத்தை இங்கு நான் பார்க்கவில்லை. இந்த திருட்டுக்களை எவ்வாறு திட்டமிட்டு செய்துள்ளார்  என்பதையே பார்க்கிறேன்.

இந்த திருட்டுக்களில் ஈடுபடுவதற்காக அவர் தீட்டியுள்ள திட்டங்கள் மிக்பெரிய குற்றமாகும்' என நீதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X