2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாணவர்களை தற்கொலை கடிதம் எழுதச் சொன்ன ஆசிரியர்

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவர்களுக்கு தற்கொலை கடிதம் எழுதி வருமாறு வீட்டுப் பாடம் கொடுத்த சம்பவம் பெற்றோர்களை அதர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நியூயோர்க் நகரில் உள்ளது மன்காட்டன் என்ற தனியார் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு மாணவர்களுக்கு பணித்துள்ளார்.

இப்பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் புத்தகம் ஒன்றில் தற்கொலை தொடர்பிலான தகவல் வந்தமை தொடர்பில் ஆசிரியர் ஒருவிடம் கேட்டுள்ளனர்.

இதனை கேட்ட ஆசிரியர் அது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்துள்ளதுடன் மாணவர்களை தற்கொலை கடிதம் எழுதி வருமாறும் பணித்துள்ளார்.

இதனை மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வியுற்று அதர்ச்சியடைந்துள்ளதுடன் இது தொடர்பில் பாடசாலை தலைமை அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அதிபர், தற்கொலை கடிதம் எழுதச் சொன்னதாக இதுவரை எந்த முறைப்பாடும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அது தொடர்பாக விசாரிப்பதாகவும் பெற்றோருக்கு பதலளித்துள்ளார்.

இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் முறையல்ல. ஏற்கனவே பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள அண்ட்டோய்ன் டெலாஃபோனட் கல்லூரியைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு தற்கொலைக் கடிதம் எழுத 2 மாதங்கள் பயிற்சி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X