2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாய் வேடமிட்டு பூனையுடன் உறவுகொண்ட நபர் கைது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாயைப் போன்று வேடமிட்டு பூனையுடன் உறவுகொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
 
அமெரிக்காவின் இடோவைச் சேர்ந்த ரயன் ஹெனென்ஸ் டெனெஹோல்ஸ் என்ற 28 வயது நபரே இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

மிருகங்களைப் போன்று வேடமிடுபவன் என அனைவராலும் நன்கு அறியப்பட்ட மேற்படி நபர் தான் வளர்த்து வந்த பூனையுடன் ஒருவருடமாக உறவுகொண்டு வந்துள்ளார்.

இவர்,   நாய், ஓநாய் போன்ற மிருகங்களின் வேடங்களை இட்டு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

இவ்வாறு கலந்துகொண்ட நிகழ்வுகளில் எடுத்துகொண்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் பொலிஸாரினால் கடந்த 1 ஆம் திகதி கைதுசெய்;யப்பட்டார்.

தவறான நடத்தை, மிருகவதை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சாட்டப்பட்டுள்ளன.

பூனைகள் மீதான் விருப்பம் குறித்தும் தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்துவரும் பூனையின் பெயரையும் இணையத்தளம் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ளார்.

'மிகவும் மென்மையான உரோமம் கொண்ட பூனைகள் மிகவும் அன்பானவையும்கூட' என அவர்  குறித்த இணையத்தளத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பூனையுடன் உறவுகொண்ட விடயம் வெளிச்சத்துக்கு வர அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைவாக அவர் 1 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் 5 வருட சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும்' என தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0

  • irsath Thursday, 15 August 2013 03:46 PM

    Enna ulahamda idu

    Reply : 0       0

    kogila Wednesday, 21 August 2013 06:02 AM

    கலிகாலம் என்பது இதைத்தான். மிருகவதை சட்டத்தின் கீழ் இவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். மிருகங்களையும் விட்டுவைக்காத இவர்களை மனிதர் என்று எவ்வாறு கூறமுடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .