2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குதிரைக்கு முன் பாய்ந்த முயலால் கசந்த தேனிலவு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக திருமணம் முடித்த இளம் தம்பதியொன்று தமது தேனிலவை வைத்தியசாலையில் கொண்டாடிய துரதிஷ்ட சம்பவமொன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் சஷ்டர் (வயது 32) மற்றும் அவரது மனைவியான என்டிரியா (28 வயது) ஆகியோரே இவ்வாறு தமது தேனிலவு நாளை வைத்தியசாலையில் செலவிட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் திருமணம் முடித்த கையோடு தேனிலவு கொண்டாட்டத்திற்காக ஹோட்டலுக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் பயணிப்பதற்காக விசேடமான குதிரை வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இத்தம்பதியரினை வழியனுப்ப சிறுமியொருவரும் குறித்த வண்டியில் பயணித்துள்ளார்.

இவர்கள் பயணித்த வழியில் எதிர்பாராத விதமாக முயலொன்று குறுக்கிட்டதால் வண்டியை இழுத்துச்சென்ற குதிரைகள் நிலைத்தடுமாறியதுடன் வண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மேற்படி இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் வாகன சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்படி தம்பதியினர் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ஹோட்டலின் வரவேற்பாளருக்கு பின்னர் பொலிஸார் விபத்து தொடர்பில் அறிவித்துள்ளனர்.

இருவரும் குணமடைந்த நிலையில் தமது திருமண சந்தோசத்தை கொண்டாடுவதற்காக இம்முறை காரில் விமான நிலையத்திற்கு பயணிக்க மேற்படி இருவரும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .