2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இளமையாக இருக்க சிறுநீர் அருந்தும் பெண்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக கடந்த 20 வருடங்களாக பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சிறுநீரை காலை பானமாக அருந்தி வருகின்றார்.

பிரிட்டனைச் சேர்ந்த சில்வியா சென்டலர் என்ற பெண்ணே இவ்வாறு செய்து வருகின்றார்.

இவர் தினமும் காலை வேளையில் ஒரு கோப்பை சிறுநீரை அருந்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

63 வயதுடைய இவர், பார்வைக்கு மிகவும் இளமையானவராகவும் ஆரோக்கியமுடையவராகவும் காணப்படுகின்றார். தனது இளமையான தோற்றத்திற்கு சிறுநீரே காரணமென அவர் உள்நாட்டு சஞ்சிகையொன்றுக்கு கூறியுள்ளார்.

தனது சிறுநீர் அருந்தும் செயற்பாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக அவர் வைத்தியசாலையில்

சிகிச்சைபெற்றுகொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

'நான் எனது சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் உள்ளேன். சிறுநீரானது எனது இளமையை பாதுகாக்கின்றது. எனக்கு 62 வயது என்று கூறினால் ஆண்கள்; ஆச்சர்யப்படுகின்றார்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.

'நான் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு கோப்பை சிறுநீரை அருந்துகின்றேன். அது சுவையாகவும் நீரை போன்றும் காணப்படுகின்றது. ஆனால், நீரைவிடவும் இனிப்பாக காணப்படுகின்றது.

நான் கடந்த 10 வருடங்களாக வைத்தியரை அணுகியதில்லை.  அதேபோல் எனக்கு தடுமலும் ஒருநாளும் ஏற்பட்டதில்லை. அதேபோல் கடந்த 10 வருடங்களாக உடற்பருமனை ஒரே அளவில் வைத்திருக்கிறேன்.

இதேவேளை இப்பெண், தனது முகத்தையும் தலை மயிரையும் சிறுநீரை கொண்டு கழுவி சுத்தம்செய்வதாக கூறியுள்ளார்.
பிரிட்டனின் பேர்மிங்கத்தில் மருந்து விற்பனை நிலைய உரிமையாளராக உள்ள மேற்படி பெண் முதலில் சிறுநீரை அருந்துவதற்காக சிரமம்கொண்டதாகவும் பின்னர் பழச்சாறுகளுடன் கலந்து அதனை அருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .