2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒட்டக அலங்கார சந்தை

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


புஷ்கர் ஒட்டக அலங்கார சந்தை 2013 ஆனது இம்முறையும் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

கடந்தவாரம் நடைபெற்ற இந்தச் சந்தையில் ஒட்டகங்கள் மிக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்போது 20,000 ஒட்டகங்கள் சந்தையில் விடப்பட்டுள்ளன. அவற்றில் பல வெளிநாட்டு உல்லாச பயணிகளால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தையில் கலந்துகொண்ட ஒட்டகங்களானது பல வர்ணங்களைக் கொண்ட ஆடைகள் மற்றும் அலங்கார பொருட்களைக் கொண்டு மிகவும் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இச்சந்தையானது பத்துவருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. எந்தவித கேலிக்கை உணர்வுகளும் இன்றி மிகவும் தீவிரமான முறையில் இச்சந்தை   நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தையில் தனது ஒட்டகம் வெற்றிபெறவில்லை என்று ஒரு போட்டியாளர் மிகுந்த கோபமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டக சந்தையின் முன்னாள்  வெற்றியாளரும் ஒட்டகச்சிவிங்கிகளை அலங்கரிக்கும் நிலையத்தை கொண்டு நடத்துவருமான டாக் என்ற நபர் இச்சந்தையில், குடையை பிடித்தவாறு அலங்கரிக்கப்பட்ட ஒட்டகத்தின் முதுகில் அமர்ந்து வரும் காட்சியானது மிகவும் அருமையாக காணப்பட்டது.

எப்படியிருப்பினும் இப்போட்டியில் ரொக்கி என்ற ஒட்டகமே இம்முறை வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளது. இந்த வெற்றி உண்மையில் வியக்கத்தக்கது என இதன் உரிமையாளர் ஹிக்மா ராம் தெரிவித்துள்ளார்.

புஷ்கர் சந்தை என்ற பெயரில் ஒவ்வொருவருடமும் இந்த ஒட்டக அலங்கார சந்தை நடத்தப்பட்டு வருகின்றது.

5 நாட்கள் தொடர்;ந்து நடைபெறும் இச்சந்தையானது உலகில் மிகப்பெரிய சந்தையாக கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .