2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் நுழைந்து நெருக்கடியை எதிர்கொண்ட நபர்

Kogilavani   / 2014 ஜனவரி 07 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்துகொண்ட நபர் ஒருவர் அரைமணி போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று  அவுஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் நகரில்  இடம்பெற்றுள்ளது.

காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவே மேற்படி நபர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் நுழைந்துகொண்டுள்ளார்.

இதன்போது சலவை இயந்திரத்தினுள் சிக்கிக்கொண்ட இந்நபர் வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார்.  முயற்சி தோல்வியடையவே தீயணைப்பு பிரிவினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குறித்த நபர்  மீது ஒலிவ் எண்ணெயை தடவி அரை மணி போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர்.

இதேபோல், அண்மையில்  அமெரிக்காவின் சால்ட் லேக் நகரில், 11 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் சகோதரிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிகொண்டிருந்த போது சலவை இயந்திரத்தினுள் ஓடி ஒளிந்துகொண்டுள்ளார்.

இச்சிறுமி வெளியில் வர முடியாமல் போகவே அவரையும் பொலிஸார் வந்து மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X