2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பாவாடைகள் அணிந்து வந்த பெண்களை படம்பிடித்தவருக்கு நெருக்கடி

Kogilavani   / 2014 ஜனவரி 15 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்பொருள் அங்காடிகளுக்கு பாவாடைகளை அணிந்து வரும் பெண்களை அவர்கள் நடக்கும்போது இரகசிய கமரா மூலம் வீடியோவாக பதிவு செய்து வந்த நபருக்கு 5 வருட சமூக பணிகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

மிடில்லேன்டின் மேற்கு பகுதி டெட்டென்ஹோலைச் சேர்ந்த ஜோன் பனிஷ்டர் என்ற 38 வயது நபருக்கே இத்தகைய தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்து மேற்படி நபர் 7 வருடங்களுக்கு எந்தவித பாலியல் குற்றங்களில்  ஈடுப்படக்கூடாது என்றும் 5 வருடங்களுக்கு பாலியல் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் அவரது பெயரும் இணைக்கப்பட்டிருக்குமென்று நீதிபதி மார்ட்டின் வோல்ஷ் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் வீடியோ கமராவையும் அது அசையாமல் இருப்பதற்காக கிழங்கு பொறியல் உள்ளடக்கப்பட்டிருக்கும் பொதியையும் நுகர்வோர் பையில் இட்டு பெண்கள் இருக்கும் பகுதி வழியாக செல்வதை தனது வழமையாக கொண்டுள்ளார்.

இந்நபர்மீது சந்தேகம்கொண்ட வாடிக்கையாளர்கள் அவரது நடவடிக்கை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததற்கமைய இந்நபர் கடந்த 2012 ஆம் நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டார்.

பெண்களின் அவயவங்களை அவதானிப்பதற்கென விசேட வீடியோ கமராவை தான் தயாரித்ததாக  அவர் விசாரணைகளின் போது பொலிஸாருக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் 2010 மே மாதம் முதல் 2012 நவம்பர் மாதம் வரை எடுத்து வைத்திருந்த 250 ஆபாசமிக்க புகைப்படங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேவேளை, இணையத்தளங்களில் இருந்தும் ஆபாசமிக்க புகைப்படங்களை அவர் பதிவிறக்கம் செய்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியமற்ற பார்வை, பொறுத்தமற்ற படங்களை எடுத்தல் போன்றவற்றுக்கு இவருக்கிருந்த மனநோயும் ஒரு காரணமென இவரது வழக்கறிஞரான டேவிட் பிராட் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவர் 12 மாதங்களாக வேலையின்றி இருந்ததால் மன அழுத்தத்துக்கும்
உள்ளாகியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X