2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஒப்பனை கலை திறமையால் சாதனைப் படைக்கும் யுவதி

Kogilavani   / 2014 ஜனவரி 28 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது ஒப்பனை கலை திறமையால் யுவதி ஒருவர் பல்வேறு விதமாக தன்னை அலங்கரித்து பார்வையாளரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

இவ் யுவதி தன்னிடமுள்ள ஒப்பனை பொருட்களைக் கொண்டு விகாரமான முகத்தோற்றங்கள் மற்றும் அழகிய உருவங்களில் தன்னை வடிவமைத்துகொள்கின்றார்.

அமெரிக்காவின் சிரிவபோர்டைச் சேர்ந்த ஸ்டெபனி பெர்னண்டஸ் என்ற 18 வயது யுவதியே இத்தகைய அபார திறமையால் பல் பரிமாணங்களை காண்பித்து வருகின்றார்.

ஒப்பனை கலையை சுயமாக கற்றுகொண்ட இவர் அதனை கொண்டு கடந்த நான்கு வருடங்களாக பயனடைந்து வருகின்றார். இவரது ஒப்பனை கலை திறமை  பல்வேறு கோணங்களில் மிகவும் காத்திரமாக வெளிப்படுத்தப்படுவதாக விமர்சிக்கப்படுகின்றது.

'ஒப்பனைக் கலை முன்னைய நாட்களைவிட மிக வளர்ச்சி கண்டுள்ளது. அதன்மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டுதான் அக்கலையை நான் சுயமாக கற்றுகொண்டேன். இதற்கூடாக நான் பல்வேறு முகத்தோற்றங்களை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தி வருகிறேன்.

இந்த ஒப்பனை கலை மீது தீராத ஆசை உள்ளது. ஓவியக் கலையின் மீதும் உள்ள ஈடுபாட்டினால் பல்வேறு வித்தியாசமான வடிவங்களை இலகுவாக என்னால் வடிவமைத்துகொள்ள முடிகிறது' என அவ் யுவதி தெரிவித்துள்ளார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X