2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காதலுக்கு கண்திறக்கும் மார்புக்கச்சை

Kogilavani   / 2014 ஜனவரி 29 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மையான காதல் உணர்வுகள் கிளர்ந்தெழுந்தால் மட்டும் திறக்கும் புதிய வகை மார்புக்கச்சையொன்று ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள பிரபல ஆடைய தயாரிப்பு நிறுவனமான ராவ்ஜோர் வடிவமைத்துள்ள இந்த மார்புக்கச்கையானது தொழில்நுட்பம், உடல் உணர்வுகளை கலவையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மார்புக்கச்சையின் ஹுக்கை சாதாரணமாக திறக்க முடியாது. ஏனெனில் காதலரொருவர் உண்மையான காதலுடன் தனது காதலியை நெருங்கும்போதும் அதேவேளை பெண்களின் மனதில் ஏற்படும் மிகைப்பட்ட காதலுணர்வுகளின்போதும் மட்டுமே அந்த மார்ப்பு கச்சை திறக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோபம் உட்பட்ட எதிர்மாறாறன உணர்வலைகள் வெளிப்படும்போது இந்த மார்புக்கச்சை திறக்காது என்றும அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மையான காதலை கணிக்கும் கருவி (ட்ரூ லவ் டெஸ்டர்) என இதற்கு பெயரிட்டுள்ளனர்.

ஆனால் இந்த மார்பு கச்சை விற்பனை சந்தைக்கு வரபோவதில்லை என்பதுதான் நுகர்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த மார்புக்கச்சையை விளம்பரத்திற்காக மட்டுமே மேற்படி ஆடை தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

 'ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அது மட்டுமல்லாமல், ஆண், பெண்களுக்கு இடையே காதல் உணர்வுகள் கிளர்ந்தெழும் வகையிலான விடயமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். விளைவு இந்த பிரா என்று மேற்படி ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் செய்தித் தொடர்பாளர் யுகா தமுரா தெரிவித்துள்ளார்.  

You May Also Like

  Comments - 0

  • Rajeev Gandhi Wednesday, 29 January 2014 02:35 PM

    Nala idea tan. Aana ite matiri ponunka podura dressum kandupidici virpana panuna nala irukum. Karpalipu kuraiyum

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X