2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முத்தம் கொடுத்தா நாக்கை கடிங்க: போபால் பெண்ணின் அறிவுரை

Kogilavani   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். வழமைபோன்று திங்கட்கிழமை காலை வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தியுள்ளார். வலியால் அந்த வாலிபர் அலறி துடித்துள்ளார். இது குறித்து இரண்டு பேரும் கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது, தான் அழகு சிகிச்சை நிலையத்தில்; வேலை செய்வதாகவும், இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் கூறிய அந்த பெண், கடந்த சில நாட்களாகவே அந்த வாலிபர் தன்னை கேலி செய்ததாகவும், இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால், முத்தம் கொடுத்த வாலிபரோ, தானும், அந்த பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், ரதிபேட்டில் வேலை பார்த்து வந்த தன்னை போபால் வந்து இரவில் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தபோது, காலையில் தம்மை சந்திக்குமாறு கூறியதாகவும், அதன்படி தாம் ரயில் நிலையத்தில் படுத்து தூங்கிவிட்டு காலையில் அந்த பெண்ணை பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் காவல்துறையினர், அந்த வாலிபரின் விளக்கத்தை ஏற்க மறுத்ததோடு வழக்கு பதிவு செய்து, அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே வாலிபரின் நாக்கை கடித்த அந்த இளம்பெண், இதேபோன்று பெண்களுக்கு ஒரு நிலைமை ஏற்பட்டால் தாம் கடைபிடித்த முறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X