2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மனைவியை கணவன் அடித்தால் அது குற்றம் இல்லை: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவியை கணவன் அடித்தால் அது குற்றம் இல்லை என்று ஆப்கானிஸ்தானில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  ஆண்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரிகளை அடித்தால் அது குற்றமாகாது என்ற ஒரு சட்ட திருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தம் தற்போது ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் பெண்கள் தங்களை கணவர் தாக்கியதாக புகார் கொடுத்தாலும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்தவித பலனும் கிடைக்கப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பெண்களுக்கு எதிரான கொடுமையை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கடந்த 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி குழந்தை திருமணம், பிரச்சனைகளை தீர்க்க பெண்களை விற்பது, வாங்குவது, அடித்து துன்புறுத்துவது, கொடுமை படுத்துவது ஆகியவை குற்றமாக கணிக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X