2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கன்னி மரியாளின் திருச்சொருபத்திலிருந்து எண்ணெய் வழிந்த அதிசயம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இஸ்ரேலின் வடக்கு பகுதி, டாரிஷாவில் கன்னி மரியாளின் திருச்சொரூபத்திலிருந்து எண்ணெய் வழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கிருஸ்தவ குடும்பமொன்று, தனது வீட்டில் வைத்திருந்த கன்னி மரியாளின் திருச்சொரூபத்திலிருந்தே இவ்வாறு எண்ணை வழிந்துள்ளது.

மேற்படி குடும்பம் கடந்த வருடந்த இந்த சொரூபத்தை வாங்கியுள்ளது. வழமைப் போன்று அன்றும் ஆராதனை செய்வதற்காக சென்றபோது அச்சொரூபத்தில் எண்ணெய் வழிந்தோடுவதை அவ்வீட்டின் பெண் கண்டுள்ளார்.

இதனை சாதாரண ஒரு நிகழ்வாக கருதிய அவர் சொரூபத்தில் வடிந்த எண்ணெயை துணியொன்றினால் துடைத்துள்ளார். ஆனாலும் எண்ணெய் வழிவது நிற்கவில்லை. அதர்ச்சியடைந்த அவர் அயலவர்களை அழைத்துள்ளார்.

பெண்ணின் குரலை கேட்டு வந்த அயலவர்கள் மாதாவின் திருச்சொரூபத்திலிருந்து எண்ணை வழிவதை பார்த்து பிரமித்து போயுள்ளனர். இது கடவுளின் கிருபை என்று கூறி அப்பெண்ணை அவர்கள் தேற்றியுள்ளனர்.

திருச்சொரூபத்தின் சில பாகங்களில் ஈரத்தன்மையாகவும் மென்மையாகவும் காணப்பட்டுள்ளன. இதனை காண்பதற்காக அவ்வீட்டைச் சுற்றி சுமார் 2,000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடியமை குறிப்பிடத்தக்கது.

'திருச்சொரூபத்தில் எண்ணெய் வழிந்ததை கண்டு எனது மனைவி அதர்ச்சியடைந்து விட்டார்' என அப்பெண்ணின் கணவர் ஒஸ்மா கவ்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X