2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிறப்புறுப்பே இல்லாமல் வாழும் யுவதி

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பிறவியிலிருந்தே பிறப்புறுப்பே இல்லாமல் வாழ்ந்து வருவதை மருத்துவர்கள் தற்செயலாய தற்போது கண்டறிந்துள்ளார்கள்.

ஜெகுயி பெக் என்ற 19 வயது யுவதியே இவ்வாறு பிறப்புறுப்பே இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

இவர் கடந்த வாரம் முதுகுவலியால் அவதிப்ப்பட்ட நிலையில்  பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் பிறப்புறுப்;பு இல்லாமல் இதுவரை வாழ்ந்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

இந்த குறை குறித்து அவ் யுவதி முன்பே அறிந்திருந்தாலும் அது தொடர்பில் யாரிடமும் கூறாமல் இருந்தததையும் மருத்துவர்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

இவரால் மற்ற பெண்களைப்போல பாலியல் உறவு வைத்துக்கொள்ளவோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாது. இதுபோன்ற குறைபாடுகளுடன் பெண்கள் பிறப்பதும் மிக அரிதிலும் அரிது என இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மற்ற சாதாரண பெண்களை போலவே இருப்பார். இவருக்கு இருக்கும் குறைபாட்டை அவரே சொல்லாமல் யாரும் அறியமுடியாது.

இவருக்கு இருக்கும் இந்த குறைபாட்டை இதுவரை இவருடைய பெற்றோர்களும் ஏன் மறைத்தார்கள். இதற்கு மருத்துவ சிகிச்சையை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற விபரங்கள் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவருக்கு தகுந்த அறுவை சிகிச்சை செய்து பாலியல் உறவுக்கு தகுதி பெறசெய்ய மருத்துவத்தில் வாய்ப்பு உள்ளது என்றும் இதுகுறித்து இவருடைய பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இவருடைய பெற்றோர்கள் யார் என்பதை மருத்துவர்கள் இதுவரை கூறவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .