2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

மகனுக்காக வீட்டு வளாகத்திலே ரோலகொஸ்டர்

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


தந்தையொருவர் தனது மகனது ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது வீட்டின் பின்புறமாக உள்ள பூங்காவில் ரோலகொஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த பெபில் (வயது 50) என்பவரே 3,500 அமெரிக்க டொலர் செலவில் 180 அடி நீளமான ரோலகொஸ்டரை உருவாக்கியுள்ளார்.

இதற்காக அவர், 300 மணித்தியாளங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

'நான் எனது குடும்பத்துடன் அமுஸ்மென்ட் பூங்காவிற்கு சென்று வரும்போது எனது மகன் லயில் என்னிடம் 'அப்பா நாம் ஏன் எங்களது வீட்டில் ஒரு ரோலகொஸ்டரை செய்ய முடியாது' என்று கேட்டார்.

அப்போதுதான் எனக்கு இதனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ரோலர்கொஸ்டரை உருவாக்கும் போது எனது மகன் லய் (11) மற்றும் மகள் எழி (12) ஆகியோர் அருகிலே இருந்தனர்.

அயலவர்களும் நான் என்ன செய்கிறேன் என்னை அவதானித்தனர். 

இவ்வாறான ரோலர்கொஸ்டரை அவர்களது வீட்டிலும் அமைத்து தரும் படி அதிகமானவர்கள்  எண்ணிடம் கேட்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடு மகிழ்ச்சியை தருமாயின்  எதிர்காலத்தில் இதனை அனைவருக்கும் செய்துகொடுப்பேன்'  என பெபில் ரோலர்கொஸ்டார் குறித்து தெரிவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .