2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

சீனாவில் பண்டா நாய்கள்

Kanagaraj   / 2014 மே 13 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பண்டா வடிவிலான நாய்கள் தற்போது சீனாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சென்குடூ நகரத்தில் ஹசின் சென் என்பவரே இவ்வாறான பண்டா நாய்களை அதிகமாக விற்பனை செய்து வருகின்றார்.

இவர், சோ ரக நாய்கள் மீது வர்ண கலவைகளை கலந்து இரண்டு மணித்தியாலங்கள் அவற்றை அதில் ஊற விடுகின்றார்.

இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவை பார்பதற்கு பண்டாவை போன்று காட்சியளிப்பதால் அதனை செல்லப்பிராணியாக வளர்க்க வேண்டும் என்ற ஆவல் சீன மக்களிடம் அதிகரித்துள்ளது.

இதனால், அதிகளவான மக்கள் பண்டா நாயை தேடி அவை விற்பனை செய்யும் கடையில் குவிந்துள்ளனர்.

நான் அந்நாய்களை விற்பனை செய்து வருகிறேன். தற்போது அந்நாய்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நாய்குட்டியின் அழகில் மயங்கி பலர் அந்நாயை வாங்குவதற்காக கடையைநோக்கி வந்த வண்ணம் உள்ளனர் என்று ஹசின் தெரிவித்துள்ளார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .