2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

கரண்டி கொரில்லா

Menaka Mookandi   / 2014 மே 21 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து, ஒஸ்வெஸ்ரி நகரின் பிரிட்டன் இரும்பு நிலையமொன்றில் கரண்டிகளை கொண்டு உருவாக்கப்பட்ட 12 அடி உயரமான கொரில்லா உருவம் ஒன்று அதன் புதிய உரிமையாளராக ஜூரி கில்லரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளது.

குறித்த சிலையினை, தென்கிழக்கு இங்கிலாந்து நாடான கென்ட் நாட்டின் இளவரசர் மைகல் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார். இவர், ஜூரி கில்லரின் தயாரிப்பு நிறுவனத்துடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த கொரில்லாவானது சுமார் 40,000 கரண்டிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அல்பி பிரட்லி என்ற சிற்பக் கலைஞரே மேற்படி கரண்டி கொரில்லாவினை வடிவமைத்திருக்கிறார்.
 
நகரத்தை சுற்றியுள்ளவர்களினால் வழங்கப்பட்ட 40 ஆயிரம் கரண்டிகளிலாலேயே இவ்வுருவம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை வடிவமைப்பதற்கு 5 மாதங்கள் செலவிடப்பட்டுள்ளது.

இதனை காட்சிப்படுத்தி தொண்டு நிறுவனத்திற்காக பணம் சேகரிப்பது நோக்கம் அல்ல, அதையும்தாண்டி வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வடிவமைத்திருக்கிறோம். குறிப்பாக, நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இதனை பார்த்து மகிழ்வதே பிரதான நோக்கமாகும் என்று ஜூரி கில்லர் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவையூட்டும் மற்றும் கரண்டிகளை நெளிய வைக்கும், நெளிந்த கரண்டி என செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுகின்ற மாயாஜால வித்தகர், தன்னால் அந்த உருவச்சிலைக்கு அருகில் செல்லமுடியாது என கூறியுள்ளார்.

காரணம் சில வேளைகளில் நான் இச்சிலையினை உற்றுப் பார்த்தால் கரண்டிகள் அனைத்தும் நெளிந்து விடும் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

குறித்த கொரில்லாவை ஒரு மாதத்தில் ஜூரி கெல்லரின் சொத்துக்களுள்ள இடமான பேர்க்ஷியாருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. கொண்டு செல்லும் போது ஹெலிகொப்டரை பிரயோகிக்க முடியாது, காரணம் இது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .