2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

உணவளித்தவரை பதம் பார்த்த முதலை

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


உணவளித்தவரின் கையை கவ்வி அவரை குளத்திற்குள் தள்ளிய முதலையொன்று தொடர்பான செய்தியொன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக் காட்சிசாலையொன்றில் ஊழியராக பணிபுரியும் டிரென்ட் பேர்டன் என்ற நபரே இச்சம்பத்தை எதிர்நோக்கியுள்ளார்.

முதலைக்கு உணவளிக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சுற்றிவர பார்வையாளர்களும் குழுமியிருந்துள்ளனர்.

இவர், மிருகக் காட்சிசாலையில் உள்ள ஜோன் என்றழைக்கப்படும் மூன்றரை அடி நீள ஆண் முதலைக்கு உணவளிப்பதற்காக சென்றுள்ளார். அவர் உணவை சரிசெய்துகொண்டிருந்த போது முதலை அவரது கையை கவ்வி இழுத்து அருகில் இருந்த குளத்தில் தள்ளியுள்ளது.

இதன்போது பேர்ட்டன் தனது கையை முதலையின் வாயில் இருந்து எடுப்பதற்கு முயற்சித்தார். ஆனாலும் அது முடியவில்லை. முதலை அவரை குளத்தில் தள்ளியது. முதலையுடன் போராடிய நிலையில் அவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பி வெளியே வந்துள்ளார் என இச்சம்பவம் குறித்து பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் பேர்ட்டன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .