2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

தலையை பதம் பார்த்த கத்தி

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



பெண்ணொருவரின் தலையை 11 சென்றிமீற்றர் நீளமான கத்தியொன்று பதம்பார்த்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஆனபோதும் அப் பெண் எதுவித பாதிப்புகளும் இன்றி உயிர்தப்பியுள்ளார்.

சீனாவின் வடகிழக்கு பகுதி, சாங்சுங் எனும் நகரத்தில் தனது மகளுடன் வசித்து வரும் லூ யான்யா என்ற 57 வயதுடைய பெண்ணே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

எதிர்பாராதவிதமாக இப்பெண்ணின் உச்சந்தலையில் மிக கூர்மையான கத்தியொன்று குத்தியுள்ளது. இதனை அவதானித்த அவரது மகள் உடனடியாக மருத்துமனையில் சேர்த்துள்ளார்.

"எனது வீட்டில் பெரிய சத்தமொன்று கேட்டது. சென்று பார்க்கையில் எனது தாயின் உச்சந்தலையில் கத்தியொன்று நீண்டுகொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். கத்தியிலுள்ள பிடி மாதிரமே வெளியில் இருந்தது.

உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றேன். வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மூலம் கத்தியை அகற்றினர்" என அப்பெண்ணின் மகள் தெரிவித்துள்ளார்.

"எனது வைத்தியத்துறை அனுபவத்தில் கண்டிறாத ஒரு சம்பவம் இது. ஆச்சரியம் என்னவென்றால் எனது நோயாளி அவ்வளவு வேதனையின் போதும் நடக்கவோ பேசவோ மறுக்கவில்லை. மயங்கவும் இல்லை" என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் இனி வரும் மருத்துவ செலவுகளுக்கு இவர்களுடைய வீட்டையும் விற்க வேண்டி வரும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .