2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சிறுத்தைக்கு மசாஜ் செய்யும் நபர்

Kogilavani   / 2014 ஜூலை 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுத்தையொன்று தனது பராமரிப்பாளரிடம் மசாஜ் செய்யக் கூறி ஏங்கும் காட்சிகளடங்கிய வீடீயோ ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் விலங்கு பரமறிப்பாளர் தனது கை வலிக்க வலிக்க சிறுத்தைக்கு மசாஜ் செய்துள்ளார். சிறுத்தையும் பராமரிப்பாளரின் கைகளை பிடித்து தலையை தடவி விடுமாறு தனது மொழியில் கூறுகின்றது.

அமெரிக்காவிலுள்ள, லுயிஸ்பேர்கில்  'காடர் கோவ் பெலினி' என்றழைக்கபடும் பூங்காவில் அநாதரவாக விடப்படும் பெரிய பூனைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காவிலே மேற்படி சிறுத்தையும் வளர்க்கப்பட்டு வருகின்றது.

இச்சிறுத்தையினை  கண்காணிப்பவர் சிறுத்தைக்கு நன்கு பரீட்சயமானதால் அவருக்கு முத்தம் கொடுப்பது, தனது மொழியில் மசாஜ் செய்ய சொல்வது போன்ற செயற்பட்டில் சிறுத்தை ஈடுபட்டு வருகின்றது.

மேற்படி காட்சிகளடங்கிய வீடியோவானது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் இதனை மில்லியன் கணக்கிலான மாக்கள் பார்வையிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .