2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

நூடில்ஸ் கோப்பையாக மாறிய தாடி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 05 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரசித்தமானவராக இருக்கவேண்டும் என்று நினைப்பது அனைவரினது இயல்பாகும். ஆனால் பிரசித்தமாவதையே அவர்களது தொழிலாக புரிந்து வருபவர்கள் தற்போது அதிகரித்துக்கொண்டு வருகின்றனர். 

அந்தவரிசையில் தனது தாடியை நூடில்ஸ் உண்ணும் கோப்பையாக மற்றிய அமெரிக்க நபர் ஒருவர் தொடர்புடைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலிபோர்னியாவின் வடக்கு பகுதியின் சென் பிரான்ஸிஸ்கோ பிரதேசத்தைச் சேர்ந்த இஸயாஹ் வெப் என்ற மேற்படி நபர் ஏற்கெனவே தனது தாடியை பல்வேறு வடிவங்களாக வடிவமைத்து இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது  தனது தாடியை நூடில்ஸ் உண்ணும் கோப்பையாக மாற்றியுள்ளார்.

இவர் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் தாடியில் வடிவங்களை அமைத்து இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை பழக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'என்னை இவ்வாறான சாதனைகளை செய்வதற்கு ஊக்குவிப்பது எனது மனைவி ஏன்ஜலாதான். அவளுக்கு நவீனமயமான வாழ்ககை என்றால் பிடிக்கும். அதைவிட எனது தாடி என்றால் மிகவும் பிடிக்கும்' வெப் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .