2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுமிகளின் சாகசம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


அதீத திறமையை வெளிப்படுத்தும் இரு சிறுமிகள் தொடர்பில் ஜப்பானில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஐப்பான் நாட்டைச் சேர்ந்த இச்சிறுமிகள் அவர்களது சாகச திறமைகளை (Porkour Skills) வீடியோவாக பதிவுசெய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதனை 5.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு சிறுமிகள் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் வீடியோ காட்சிகள் ஆரம்பமாகின்றன.

அதில் ஒரு சிறுமியை இன்னொரு சிறுமி துரத்துவதும் துரத்தும் போது கூரையில் பாய்தல், சுவரில் ஏறுதல், மாடியில் இருந்து கீழே குதித்தல், குட்டிகரணம் அடித்தல் போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இக்காட்சியை பார்வையிட்ட மில்லியன் கணக்கான மக்கள் அச்சிறுமிகளை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X