2025 மே 12, திங்கட்கிழமை

பால் சுரக்கும் மரம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியிலுள்ள வீட்டு காணியில் காணப்படும் வேப்பை மரத்தில் இருந்து, தொடர்ச்சியாக பால் வடியும் சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 தினங்களுக்கு முன் குறித்த வேப்பை மரத்தின் தண்டுப்பகுதியில் இருந்து  பால் வடிய ஆரம்பித்தது. இந்நிலையில், தற்போது  வேப்பை மரத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொடர்ச்சியாக அதிகளவான பால் வடிந்து கொண்டிருக்கின்றது.

இவ் வேப்பை மரத்தை மக்கள் சென்று பார்வையிட்டு வருவதோடு, பால் வடியும் பகுதியில் போத்தல்களை வைத்து பாலை எடுத்துச் செல்கின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X