2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


வேறொரு ஆணையோ அல்லது பெண்ணையோ தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள விரும்பாத பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட விநோதச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் என்ற இளம்பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். 

புகைப்படக்கலைஞரான இவருக்கு எந்த ஆணையும் அல்லது பெண்ணையும் திருணம் செய்துகொள்ள விருப்பமில்லை.

இதனால் இவர், கடந்த 6 ஆண்டுகளாக தனக்கு தானே காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். தன் காதலின் அடுத்த கட்டமாக தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதென  இவர் முடிவு செய்துள்ளார்.

இதன்படி, லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து கொண்டு தனது திருமணத்தை அறிவித்தார் கிரேஸ். பின்னர், தன் திருமணத்துக்கு தேவையான மணப்பெண் உடை மற்றும் மோதிரம் என்பவற்றையும் வாங்கியுள்ளார்.

நிச்சயிக்கப்பட்டபடி, தனது திருமண நாளன்று டேவன் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 50 பேரை  அழைத்துச்சென்று, அவர்களுக்கு தடபுடலாக விருந்து அளித்தார்.

பின்னர் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு தனக்குத் தானே மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.  கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்துக்கு தானே முத்தம் கொடுத்து அன்பையும் பறிமாறிக் கொணடுள்ளார்.

கிரேசின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், இது வித்தியாசமான அனுபவத்தைத் தந்ததாக கருத்துத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .